மண்கும்பான் 4ம் வட்டாரத்தில் அமைந்துள்ள-திரு திருமதி தங்கவேல்-சிவமணி தம்பதிகளின் வீட்டிற்குள்-செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் முகத்தை மறைத்தபடி உட்புகுந்த இனந்தெரியாத-கும்பல் ஒன்று-தம்பதிகளின் 24 வயதுடைய விஜி என்னும் பெயருடைய இளைஞரை-கட்டிப் போட்டுவிட்டு-வீட்டை சூறையாடிக் கொண்டு இருட்டில் ஓடி மறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாயாரும் மகனுமே வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.வீட்டின் தலைவரான திரு தங்கவேல் அவர்கள் வெளி ஊருக்குச் சென்றிருந்த நிலையிலேயே இக் கொள்ளை நடைபெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த பணம்-கைக்கடிகாரங்கள்-மற்றும் கைத் தொலைபேசி உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.செவ்வாய் இரவு 11 மணிக்கு நடைபெற்ற-கொள்ளை தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்த போதிலும்-மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு திரும்பியிருந்தனர்.இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இக் கொள்ளைச் சம்பவத்தைக் கேள்ளிப்பட்ட மண்கும்பான் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment