மண்கும்பான் 4ம் வட்டாரத்தில் அமைந்துள்ள சிறுவர்கள் கல்விபயிலும் ஆரம்ப பாடசாலைக் கட்டிடத்தின் தோற்றமே இது.இந்த கட்டிடத்தின் கூரை மற்றும் கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளதால்-அண்மையில் பெய்த கடும் மழையினால் மாணவர்கள் பெரும்சிரமப்பட்டதாகவும் இடப்பற்றாக்குறை, வசதியின்மை காரணமாக பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுள்ளனர்.
இப்பாடசாலைக் கட்டிடத்தை மிக விரைவில் புனர்நிர்மாணம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு சுமார் 3 இலட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
புலம்பெயர் வாழ் மண்கும்பான் மக்கள், பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், ஏனைய உறவுகள் என அனைவரும் உங்களால் இயன்ற அளவு நிதி உதவிகளை செய்து உதவிட வேண்டும் என்று உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்..
புலம்பெயர் மண்கும்பான் மக்களே!
இந்த சிறார்களின் கல்விக்காக-இந்த முன் பள்ளிக்கட்டிடத்தை புனர்நிர்மாணம் உடனடியாக உதவ முன்வருவீர்கள் என நம்புகின்றோம்



No comments:
Post a Comment