அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-கிராமிய சுகாதார நிலையத்திற்கு வருகை தரும் நோயாளர்களின் நலன் கருதி-எமது செய்தியாளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் குடிநீர்க்குழாய் இணைப்பை-பொருத்திக் கொடுத்துள்ளோம்.
இதற்கு முன்னர் இங்குள்ள கிணற்றில் இருந்தே-நோயாளர்களும்-கர்ப்பிணித்தாய்மார்களும்-குடிதண்ணீரை அள்ளிக் குடிக்க வேண்டிய நிலை காணப்பட்டதாகவும்-அதை நிவர்த்தி செய்து குடிநீர்குழாயைப் பொருத்தி தருமாறு தொடர்ந்து விடுத்த வேண்டுகோளை ஏற்று நாம் நேரடியாக இதைச் செய்து கொடுத்துள்ளோம்.
அல்லைப்பிட்டி சுகாதார நிலையத்தில் மருத்துவத்தாதியொருவர் நிரந்தரமாகத் தங்கியுள்ளார் என்பதோடு-வாரத்தில் ஒருநாள் டொக்டர் வருகைதந்து நோயாளர்களை பார்வையிட்டு வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
.png)

.png)
.png)
No comments:
Post a Comment