News Update :

Thursday, 4 April 2013

அல்லைப்பிட்டி மண்கும்பான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட-டெங்கு ஒழிப்பு பிரச்சார நடைவடிக்கை-படங்கள் விபரங்கள் இணைப்பு!


அண்மையில் அல்லைப்பிட்டி,மண்கும்பான் பகுதிகளில் அரச அதிகாரிகளினால் டெங்கு ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.இப்பிரச்சார நடைவடிக்கையில்-வேலணை பிராந்திய வைத்திய அதிகாரி மற்றும் வேலணைப் பிராந்திய சுகாதாரப் பரிசோதகர்கள்-அல்லைப்பிட்டி பிரதேசபை உப அலுவலகப் பொறுப்பாளர்-மற்றும் அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் என பல அரச அதிகாரிகள்  கலந்து கொண்டிருந்தனர்.

மண்கும்பான் மழலைகள் முன்பள்ளியிலும்-அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புதிய குடியேற்றத்திட்டத்திலும்-அல்லைப்பிட்டி கிழக்கில் வீதி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த,தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.