News Update :

Wednesday, 25 July 2012

மண்கும்பான் சாட்டி கடற்கரையில் குவியும் புலம்பெயர் மக்கள்-நவீன கழிப்பிட அறை பிரதேச சபையினால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது


இம்முறை தீவகத்தைச் சேர்ந்த அதிகளவான புலம்பெயர் மக்கள்-தமது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிப்பதற்காக-தாயகம் வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.குடும்பத்துடனோ-அல்லது தனியாகவோ இவர்களை தீவகத்தில் காணக்கூடியதாக இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரம் தீவகத்திற்கு வருகைதரும்-புலம்பெயர் மக்களின் பொழுதுபோக்கும் இடமாகமண்கும்பான் சாட்டி வெள்ளைக்கடற்கரையே! தற்போது மாறியுள்ளது.இங்கு நாளாந்தம் அதிகளவான உல்லாசப்பயணிகள் வந்துசெல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.தென்னிலங்கையிலிருந்து வரும் மக்களுடன்-புலம்பெயர் நாடுகளிலிருந்து வரும் மக்களும் கூடும் முக்கிய இடமாக-சாட்டி வெள்ளைக்கடற்கரை மாறியுள்ளது.
அதிகளவான மக்கள் கூடுவதனால்-சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளதாக-அண்மையில் தினக்குரல் செய்தி வெளியிட்டிருந்தது.
கீழே தினக்குரல் வெளியிட்ட செய்தி முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது!
யாழ்ப்பாணம் மண்கும்பான் சாட்டி கடற்கரை துப்புரவில்லை எனவும் அங்குள்ள உடை மாற்றும் அறைகள் துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய கடற்கரையாக காணப்படும் சாட்டி கடற்கரை வேலணை பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்களுக்கு தரிப்பிட பணம் வசூலிக்கப்பட்டும் வருகின்றது.
இப் பணம் கடற்கரை பராமரிப்புக்கென தெரிவிக்கப்பட்டபோதிலும் கடற்கரை கழிவுப் பொருட்கள் நிறைந்தும் கடற் தாவரங்களால் நிரம்பியும் காணப்படுவதுடன், பெண்கள் உடை மாற்றும் அறை துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இப் பகுதியை மேலும் துப்புரவாக பேணும் சந்தர்ப்பத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் பிரதேசமாக மாற்ற முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
நவீன கழிப்பிடம் விரைவில் திறப்பு!
சுகாதார சீர்கேட்டை கட்டுப்படுத்தும் முகமாக-நவீன கழிப்பிட அறைகள் அமைக்கப்பட்டு-மக்கள் பாவனைக்காக விரைவில் வேலணை பிரதேசசபையினால் திறந்துவைக்கப்படவுள்ளதாக-எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.