News Update :

Thursday, 26 July 2012

மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலய ஆடிப்பூரத் திருவிழாவில் நடந்தது என்ன..?


மண்கும்பானில் அமைந்துள்ள கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தில்-23-07-2012 திங்கள் அன்று  ஆடிப்பூரத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று.

இரவு ராஜன்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆரம்பமான போதுதான் அந்தப் பயங்கர மோதல் ஆரம்பமானது.

கறுப்பாத்தி அம்மன் வீதியுலா வந்த பின்னர்-இரவு இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போது வாகனங்களில் வந்த அல்லைப்பிட்டி  இளைஞர்கள் சிலர்  அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாகவும் அவர்களின் இந்த நடைவடிக்கைகளை எதிர்த்த மண்கும்பான்  இளைஞர்களுக்கும்  இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் இருபகுதியும் ஈடுபட்டதாகவும் அதைத் தொடர்ந்து ஆயுதங்கள் கொண்டு ஒருவரையொருவர் ஆவேசமாக தாக்கத் தொடங்கியதாகவும் பல இளைஞர்கள் வாள் வெட்டுக்கும் பொல்லடிக்கும் இலக்கானதாகவும் அதிகளவான மக்கள் கூடியிருந்த இடத்தில் ஆவேசமாக இவர்களின் தாக்குதல் நடைபெற்றதால் மக்கள் அங்கிருந்து களைந்தனர்  என்று சம்பவம் நடைபெற்ற இடத்தில் நின்றவர்கள் விபரித்தனர்.

இச்சண்டையினால் இசைநிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டதாகவும் படுகாயமடைந்ந இளைஞர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மேலும் விபரித்தனர். சண்டையில் ஈடுபட்ட அல்லைப்பிட்டி  இளைஞர்கள் சிலர் மதுபோதையில் இருந்ததாகவும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் மேலும் விபரித்தனர்.
இது இசை நிகழ்ச்சியை குழப்பும் நோக்கமாக நடைபெற்றது  என்று மண்கும்பான்  மக்கள்  விபரித்தனர்.





சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் உண்மைத் தன்மையை எம்மால் முழுமையாகப் பதிவு செய்ய முடியாமைக்கு வருந்துகின்றோம்.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.