யாழ்.வேலணை, மண்கும்பான் கடற்பரப்பில் தொடர்ச்சியாக கரை ஒதுங்கி வரும் சடலங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பயணித்தவர்களினதாவென சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே நேற்று சனிக்கிழமை குறித்த பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில் அது மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஞாயிறு காலையும் மற்றொரு சடலம் கரையொதுங்கியிருக்கின்றது. இந்தச் சடலமும் முற்றாக உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது. சடலத்தின் தலைப்பகுதி முற்றாக உருக்குலைந்துள்ளது, மேலும் சடலத்தில் கறுப்பு நிறத்திலான உள்ளாடையொன்று காணப்படுகின்றது. இச்சடலத்தையும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மீட்டுள்ளதோடு, சடலங்கள்; குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கரையொதுங்கியுள்ள சடலங்கள் எவையும் இது வரையிலும் அடையாளங் காணப்பட்டிருக்கவில்லை.குறித்த காலப்பகுதியில் மீனவர்கள் எவரும் உள்ளுரில் காணாமல் போயிராத நிலையில் முதலில் இந்திய மீனவர்களினுடையதாவென கேள்வி எழுந்திருந்தது.ஆயினும் இந்திய மீனவர்கள் தரப்பிலிருந்தும் காணாமல் போனமை தொடர்பாக தெளிவான பதில்கள் கிட்டியிருக்கவில்லை.இந்நிலையில் இச்சடலங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பயணித்தவர்களினதாவென தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment