News Update :

Tuesday, 5 March 2013

அல்லைப்பிட்டி மாணவனின் நூல் வெளியீட்டுக்காக-30 ஆயிரம் ரூபாக்களை வாரிவழங்கிய உயர்ந்த உள்ளம்-விபரங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சிவலிங்கம் துஷ்யந்தன் எனும் யாழ் மத்திய கல்லூரி உயர்தர மாணவன். தான் எழுதிய நாவலை வெளியிட உதவும்படி அல்லையூர் இணையம் மூலம் புலம்பெயர் உறவுகளைக் கேட்டிருந்தார்.
இதை அறிந்து கொண்ட ஜெர்மனியில் வசித்துவரும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திருவாளர்.சுப்பிரமணியம் குணபாலசிங்கம் அவர்கள் புத்தக வெளியீட்டுக்குத் தேவையான 30 000 ரூபாயை வழங்கியிருக்கிறார்.
செல்வன் சிவலிங்கம் துஷ்யந்தன் அல்லையூர் இணையம் மூலமாக தன் உளப் பூர்வமான நன்றிகளை-
திருவாளர் சுப்பிரமணியம் குணபாலசிங்கம் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதுடன் இவ் உதவி பெற பாலமாய் அமைந்த அல்லையூர் இணையத்துக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.

அல்லையூர் இணையத்தின் விசேட நன்றி தெரிவிப்பு
எமது இணையத்தில் செல்வன் துஸ்யந்தனின் வேண்டுதலை பதிவு செய்தவுடன்-தொலைபேசி மூலம் எம்மோடு தொடர்பு கொண்ட திரு பிரான்சிஸ் அமலதாஸ் அவர்கள்-தான் துஸ்யந்தன் கேட்ட நிதியினைத் திரட்டித்தருவதாக உறுதியளித்திருந்தார்-அவரே ஜெர்மனியில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் குணபாலன்(இவர் திரு எஸ் ஆர் அவர்களின் சகோதரர்)அவர்களோடு தொடர்பு கொண்டு நிதியினைப் பெற்று அல்லைப்பிட்டியில் வசிக்கும் துஸ்யந்தனுக்கு அனுப்பி வைத்தார் என்பதனையும்-நன்றியோடு உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.