தீவகத்தின் புனிதப்பூமியாகக் கருதப்படும்-நயினாதீவில் அமைந்துள்ள-நாகபூசனி அம்மன் ஆலயத்தின் நிர்வாகசபை கலைக்கப்பட்டு-நீதிமன்றம் பொறுப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2001 ஆம் ஆண்டு தொடக்கம் ஆலயத்தில் ஏற்பட்ட நிதி, நிர்வாக குழறுபடிகள், மோசடிகள் தொடர்பாக தொடர் நீதீமன்ற வழக்குகளின் பிரகாரமும் சட்டவியல் கோவைகளின் பிரகாரமும் 2008 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட மாவட்ட செயலரின் ஆணைக்குழுவின் அறிக்கை பெற்றதன் பிரகாரம் மீண்டும் மாவட்ட நீதிமன்றில் தொடுக்கப்பட்ட நசொ/09/09 வழக்கின் பிரகாரம் கடந்த கால சுமார் 10 வருட காலத்துக்கும் மேற்பட்ட ஆலய நிதி நிர்வாக பிணக்குகள் சம்பந்தமாக நீதிமன்றம் கவனத்தில் கொண்டு 15.03.2013 ஆம் திகதி மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் நீதிபதியின் கட்டளையின் பிகாரம் 18.03.2013 திகதியிலிருந்து நிதி, நிர்வாகம் அனைத்திலிருந்து ஆலய அறங்காவலர் சபையினை இடைநிறுத்தி நீதிமன்ற பதிவாளர் அவர்களை பெறுநராக நியமனம் செய்யப்பட்டு அதன் கீழ் வழமைபோன்ற ஆலய செயற்பாடுகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவது என கட்டளையிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கடந்த 16 ஆம் திகதி நீதிமன்ற உத்தியோகத்தர்கள் ஆலயம் வருகை தந்து அதன் நிர்வாகக் கட்டமைப்புக்கள், கடமைகளை ஆய்வு செய்து சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment