News Update :

Monday, 18 March 2013

அல்லைப்பிட்டியில் இன்று இரவு சாரதியுடன் கிணற்றுக்குள் தலைகுத்தி வீழ்ந்த,உளவு இயந்திரம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டியில் கடல் நீர் உட்புகாமல் தடுப்பணை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த,உளவு இயந்திரம் ஒன்று தனது பணியை-முடித்துவிட்டு பிலிப்நேரியார் ஆலயத்தின் முன்னால் செல்லும் சர்வோதய வீதியால் வந்து கொண்டிருந்த சமயம்-3ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு செல்வரட்ணம் அவர்களுக்குச் சொந்தமான தோட்டக்கிணற்றுக்குள் சாரதியுடன் வீழ்ந்ததாக
தெரிவிக்கப்படுகின்றது.இந்த உளவு இயந்திரம் மண்டைதீவைச் சேர்ந்தவருடையது என்றும் தெய்வாதீனமாக அவர் உயிர் தப்பியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும் இருட்டாகவும்-அதேநேரம் பாதுகாப்பற்று நிலமட்டத்துடன் கிணறு காணப்பட்டதனாலுமே-இவ்வனர்தம் ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.