மண்கும்பானில் கடற்படையினருக்கான பயிற்சி நடவடிக்கையின் போது இடம்பெற்ற ஆர் பீ ஜி
குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் கடற்படைச்சிப்பாய்கள் அறுவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஆறு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சையின் பின்னர் ஐவர் அங்கிருந்து வெளியேறினர். ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகிறார் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
மண்கும்பான் சாட்டியில் அமைந்துள்ள-கடற்படையினரின் பயிற்சி முகாமிலேயே இக்குண்டு வெடிப்பு அனர்த்தம் ஞாயிறு காலை ஏற்பட்டது என்றும், ஏவப்பட்ட குண்டு பனை மரத்தில் வீழ்ந்து வெடித்துள்ளது என்றும் கடற்படைப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது காயமடைந்த படையினரின் ஐவரின் விவரங்கள் வருமாறு:
ஏ.எச்.எஸ்.எம். திலகரட்ண (வயது 27), எஸ்.எம்.வன்னிநாயக்க (வயது 24), எஸ்.எஸ்.பனவெல (வயது 26), ஏ.எம்.சி.பி.அபயவர்த்தன (வயது 23), ஏ.எம்.என். எஸ். குமார (வயது 25).
நன்றி-உதயன்
No comments:
Post a Comment