News Update :

Monday, 4 March 2013

இலங்கை உயர்கல்வி அமைச்சு நடாத்திய போட்டியில் வெற்றிபெற்ற,அல்லைப்பிட்டி மாணவி ரட்ணேஸ்வரன் வித்தியா அவர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,மாணவி செல்வி ரட்ணேஸ்வரன் வித்தியா அவர்கள்-இலங்கை உயர்கல்வி அமைச்சு நடாத்திய, இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் மிக்க அறிவு சார் தேடலாகிய "ஆற்றல்"- Talent போட்டிகளின் கவிதைப்பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று-எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


வெற்றி பெற்றவர்களுக்கான பிரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள- தாமரை தடாக கலையரங்கத்தில் 21-02-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.75 ஆயிரம் ரூபாவுக்கான காசோலையும்- சான்றிதழும் செல்வி வித்தியாவுக்கு வழங்கப்பட்டன.

செல்வி வித்தியா அவர்கள்-எங்கள் அல்லைப்பிட்டி கிராமசேவையாளரின் புதல்வி என்பதுடன்-மண்டைதீவையும் அல்லைப்பிட்டியையும் தன்து இரு கண்களாக நேசிக்கின்றார் என்பதனை இவரது எழுத்துக்களிலிருந்து நாம் தெரிந்து கொண்டோம்.அத்தோடு இவர் சிறந்த நிழற்பிடிப்பாளரும் கூட-இவரினால் அல்லைப்பிட்டி மண்டைதீவில் எடுக்கப்பட்ட சில நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.அத்தோடு இவரது எழுத்துக்களில் சமுதாய அக்கைறையும்-ஆவேசமும் கலந்தே தெரிகின்றது.

எமது கிராமத்திற்கு பெரும்புகழைச் சேர்த்திருக்கும் செல்வி ரட்ணேஸ்வரன் வித்தியா அவர்கள்-மேலும் புகழ் பெற்று விளங்க அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவன் துணை புரிய வேண்டுகின்றோம்.
மேலே உள்ள படத்தில் பரிசு பெறுபவரே-செல்வி ரட்ணேஸ்வரன் வித்தியா ஆவார்

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.