News Update :
Powered by Blogger.

Thursday, 4 April 2013

அல்லைப்பிட்டி மண்கும்பான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட-டெங்கு ஒழிப்பு பிரச்சார நடைவடிக்கை-படங்கள் விபரங்கள் இணைப்பு!


அண்மையில் அல்லைப்பிட்டி,மண்கும்பான் பகுதிகளில் அரச அதிகாரிகளினால் டெங்கு ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.இப்பிரச்சார நடைவடிக்கையில்-வேலணை பிராந்திய வைத்திய அதிகாரி மற்றும் வேலணைப் பிராந்திய சுகாதாரப் பரிசோதகர்கள்-அல்லைப்பிட்டி பிரதேசபை உப அலுவலகப் பொறுப்பாளர்-மற்றும் அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் என பல அரச அதிகாரிகள்  கலந்து கொண்டிருந்தனர்.

Wednesday, 20 March 2013

நெடுந்தீவு குறிகாட்டுவான் படகுச் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது


தீவகம் - நெடுந்தீவு குறிகாட்டுவான் படகுச் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள அரச மற்றும் தனியார் படகு சேவைகள் போதுமானதாக இல்லை. அதனால் புதிய முன்மொழிவு ஊடாக புதிய படகு கொள்வனவு செய்ய நெடுந்தீவு பிரதேச சபை ஆலோசித்து வருகிறது.

கடந்த வருடங்களை விட தற்போது வெளியிடங்களில் இருந்து வரும் பயனிகளின் தொகை அதிகரித்து வருகிறது. அத்துடன் நெடுந்தீவு பயனிகள் போக்குவரத்து மற்றும் பொருள்கள் ஏற்றி இறக்குவதற்குக் கூட தற்போது சேவையில் ஈடுபட்டிருக்கும் படகுகள்  போதுமானவையாக இல்லை

Tuesday, 19 March 2013

விரைவில் மண்டைதீவு வீடுகளுக்கு குழாய்மூலம் குடிதண்ணீர் விநியோகம்-விபரங்கள் இணைப்பு!


விரைவில் மண்டைதீவு வீடுகளுக்கு குழாய்மூலம் குடிதண்ணீர் விநியோகம்-விபரங்கள் இணைப்பு!

சப்த தீவுகளில் ஒன்றான காரைதீவு


சப்த தீவுகளில் ஒன்றான காரைதீவு 12.09.1923 இல் முதல் அரசு ஒப்புதலால் காரைநகர் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. 1987ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட தட்சணகைலாய புராணத்திலும் காரைநகர் என்ற வழக்கு இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்க விடையமாகும். இந்த வகையில் யாழ்ப்பாணக் கடல் வழிப்பாதையிலே காரைதீவும், ஊர்காவற்றுறையும் அமைந்திருப்பதனால் அவை புராதன காலத்திலிருந்து கேந்திர முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகின்றன.

Monday, 18 March 2013

அல்லைப்பிட்டியில் இன்று இரவு சாரதியுடன் கிணற்றுக்குள் தலைகுத்தி வீழ்ந்த,உளவு இயந்திரம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டியில் கடல் நீர் உட்புகாமல் தடுப்பணை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த,உளவு இயந்திரம் ஒன்று தனது பணியை-முடித்துவிட்டு பிலிப்நேரியார் ஆலயத்தின் முன்னால் செல்லும் சர்வோதய வீதியால் வந்து கொண்டிருந்த சமயம்-3ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு செல்வரட்ணம் அவர்களுக்குச் சொந்தமான தோட்டக்கிணற்றுக்குள் சாரதியுடன் வீழ்ந்ததாக

பிரசித்தி பெற்ற,நயி்னாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகம் கலைப்பு! நீதிமன்றம் கையேற்பு!


தீவகத்தின் புனிதப்பூமியாகக் கருதப்படும்-நயினாதீவில் அமைந்துள்ள-நாகபூசனி அம்மன் ஆலயத்தின்  நிர்வாகசபை கலைக்கப்பட்டு-நீதிமன்றம் பொறுப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Wednesday, 13 March 2013

மண்கும்பான் வெள்ளை புற்றடி வீரகத்திவிநாயகர் ஆலய சுற்றுபுறயங்களில் நாட்டப்பட்டுவரும் நிழல் மரங்கள் மற்றும் பயன் தரும் மரங்கள் .


மண்கும்பான் வெள்ளை புற்றடி வீரகத்திவிநாயகர் ஆலய சுற்றுபுறயங்களில் நாட்டப்பட்டுவரும் நிழல் மரங்கள் மற்றும் பயன் தரும் மரங்கள் .
 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.