மண்கும்பானில் அமைந்துள்ள-தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி யுனிசெப் நிறுவனம் வழங்கிய 5 இலட்சம் ரூபாக்களின் நிதியுதவியுடன் பாடசாலை நிர்வாகத்தின் மேற்பார்வையில் கழிப்பிட அறை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.மண்கும்பான் தமிழ்கலவன் பாடசாலையில் தற்போது அதிகளவான மாணவர்கள் கல்விபயில்வதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இப்பாடசாலைக்கான-மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் மாணவர்கள் நிதிஉதவி புரிந்துள்ளதாகவும் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.png)

No comments:
Post a Comment