Thursday, 24 January 2013
அல்லைப்பிட்டி மாணவனின் உருக்கமான வேண்டுகோள்..!
அல்லைப்பிட்டியில் விவசாயக்குடும்பத்தில் பிறந்த,ஏழை மாணவன் தான் செல்வன் சிவலிங்கம் துஸ்யந்தன் ஆனால் தான் படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற தீராதவெறி அம்மாணவனுக்குள் இருந்தது.பாடசாலைக்குச் செல்லும் நேரத்தைத்தவிர மற்றைய நேரங்களில் அல்லைப்பிட்டியில் உள்ள விவசாய நிலத்திலேயே அவனது முழுக்கவனமும் இருந்தது ஏனெனில் அவனது குடும்ப நிலை அப்படியிருந்தது.பாடசாலை-தோட்டம் என்று இருந்த மாணவன் துஸ்யந்தனுக்குள் ஏதாவதுஎழுத வேண்டும் என்ற ஆர்வமும் மேலோங்கியிருந்தது.இதன் வெளிப்பாடாக அவனுக்கு கிடைத்த ஓய்வு நேரங்களில் எழுதிமுடிக்கப்பட்ட ஒரு நாவலே-நீண்ட பயணம் பகுதி-2 ஆகும்.இந்த நாவல் கல்வித்தினைக்கழகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு-அனுமதி கிடைக்கப் பெற்று-வரும் 07 -02-2013அன்று யாழ் மத்திய கல்லூரியால் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இன் நிலையிலேயே மாணவன் துஸ்யந்தன், புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம் -தன் நாவலை வெளியிட உதவிடுமாறு உரிமையோடு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நன்றி
அல்லையூர் இணையம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment