Friday, 25 January 2013
வன்புணர்வின் பின் மண்டைதீவில் சிறுமி படுகொலை; சந்தேக நபர்கள் இருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது!
மண்டைதீவுப் பகுதியில் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட 4 வயதுச் சிறுமியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் நேற்று முன்தினம் புதன்கிழமை ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டபோது வழக்கை விசாரணை செய்த ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.எஸ்.எம்.மகேந்திரராசா சந்தேக நபர்கள் இருவரின தும் இரத்த மாதிரிகளை எடுத்து மரபணுப் பரிசோத னைக்கு அனுப்புமாறும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்கு மாறும் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவ ரும் மண்டைதீவுப் பகுதி யைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மண்டை தீவு 2 ஆம் வட் டாரம் பகுதியில் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியான குணசேகரம் சுதாகினி (வயது4) கடந்த மாதம் 28ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். விசாரணைகளில் அவர் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.
இந்தச் சிறுமியின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் சிறுமியின் உடற்பாகங்கள் இழையவியல் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஊர்கா வற்றுறைப் பொலிஸாரால் இந்த இரு சந்தேக நபர்களும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment