மாத்தளை நகரைச் சேர்ந்த அம்பாள் பக்தையான புனித அன்னை கருணாகரன் சத்தியகலா என்பவரின் கனவில் தோன்றிய அம்பாள் மேற்படி ஆலயம் தொடர்பில் தமது கருத்தினை வழங்க இவ்விடயத்தை தமது கணவர் கருணாகரனிடம் தெரிவிக்க எமது ஊரை அறிந்திராத அந்தப் பெருமகள் எமதூரின் மைந்தரும் முன்னைநாள் சிவசக்தி இந்து இளைஞர்மன்றத்தின் தலைவருமான திரு.சச்சிதானந்தம் காந்தரூபன் அவர்களுடன் தொடர்பு கொண்டு சிவாச்சாரியார் உருத்திரமூர்த்திக் குருக்கள் அவர்களையும் அழைத்து வந்து தற்போதைய ஆலய முகாமையாளர் வர்ணலிங்கம் தேவனின் சிறிய தந்தையாரும் முகாமைத்துவ பங்காளருமாகிய சீவரத்தினம் மகேந்திரராசா அவர்களுடன் தொடர்பு கொண்டதன் பேரில் அவர் முகாமையாளரின் சார்பாகவும் ஏனைய உரித்தாளர்களின் பூரண சம்மதத்துடன் 2013ம் ஆண்டு மாசிமாதம் 24ம்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்பாள் ஆலய முன்றலில் மதிப்புக்குரிய J 7 மண்டைதீவு கிழக்கு கிராம சேவை அலுவலர் திரு இ.ரமேஸ் அவர்களின் தலைமையில் உருத்திரமூர்த்திக்குருக்கள், திரு.செ.கருணாகரன், ச.காந்தரூபன் ஆகியோர் முன்னிலையில் பரிபாலன சபையின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்று ஆலய பரிபாலனம் பொதுமக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. 
பரிபாலன சபை:
தலைவர் : திரு.க.பரமானந்தம்.
உப தலைவர் : திரு.க.பாவேந்தன்.
செயலாளர் : திரு.பே.சுசியந்தன்.
உப செயலாளர்: திரு.ப.ரவிச்சந்திரன்.
பொருளாளர் : திரு வை.கெங்காதரன்.
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
திரு.வி.ஜனார்த்தனன்
திரு.ந.நடேசமூர்த்தி . திரு.அ.ஸ்ரீபத்மராசா.
திரு.கு.க.நடராசா. திரு வீ.சோமசுந்தரம்.
திரு.க.சிவராசா.
போசகர். திரு.சீ.மகேந்திரராசா.
கணக்காய்வாளர்: திரு பே.மகிந்தன்
ஆலோசகர்கள்:
திரு.இ.ரமேஸ் (கிராம சேவை அலுவலர் மண்டைதீவு) திரு.செ.கருணாகரன் (சேவாலங்கா, முல்லைத்தீவு) திரு.சி.உருத்திரமூர்த்திக் குருக்கள் திரு.ச.காந்தரூபன் (வர்த்தகர் முல்லைத்தீவு)கிராம சேவை அலுவலரின் தலைமையுரையையும் குருக்கள் ஐயாவின் ஆசியுரையையும் ச.காந்தரூபன் அவர்களின் விளக்கவுரையும் புதிய தலைவரின் ஏற்புரையும் வீ.சோமசுந்தரம்இகு.க.நடராசா, கை.பேரின்பநாயகம், அ.ஸ்ரீபத்மராசா ஆகியோரின் சபையோர் கருத்துரையும் செயலாளரின் நன்றியுரையும் இடம்பெற்றது.
தீர்மானங்கள்:-
1.ஆலயத்தை முறைப்படி பதிவு செய்தல்.
2.விநாயகர் சிலை வைத்து பூசை வழிபாட்டை மேற்கொள்ளல்.
3.நிரந்தர ஆலயம் அமைப்பதற்கு இடம் எடுத்தல்.
4.ஆலய புனருத்தானத்தை விரைவாக முன்னெடுத்தல்.
ஆரம்ப புனருத்தான பங்களிப்பு ஏற்பாக:-
1.மாத்தளை செ.கருணாகரன் குடும்பத்தார் விநாயகர் சிலை ஆசனம் அதற்கான ஏனைய செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் நிதி அன்பளிப்பும் செய்வதாக தெரிவித்தனர்.
2.போசகர் சீ.மகேந்திரராசா வினாசித்தம்பி சீவரத்தினம் குடும்பம் சார்பாக ஆரம்ப கட்ட நிதியாக ரூபா ஒரு லட்சம் வழங்குவதாக தெரிவித்தார்.
3.கமல் செரமிக் முல்லைத்தீவு (மல்லாவி) உரிமையாளர் ச.காந்தரூபன் ஆலய வர்ணப்பூச்சு வேலைகளை முழுமையாக செய்து தருவதாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பரிபாலன சபையினரின் அன்பான வேண்டுதல்
பழமை வாய்ந்ததும் அருள் நிறைந்ததுமான இவ்வாலயத்தை புனருத்தானம் செய்யும் அரிய பொறுப்பு பொதுமக்களாகிய உங்களால் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை உரியமுறையில் செய்வதற்கு வேண்டிய ஆலோசனைகள், நிதியுதவி, சரீர உதவி ஆகியவற்றை வழங்கி உதவிடுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
புலம்பெயர்ந்து வாழும் எமது அன்பான உறவுகளுக்கு
எங்களது வாழ்வும் வளமும் ஏனைய சிறப்புக்களும் உங்களையே சார்ந்துள்ளது யாவரும் அறிந்ததே எனவே பல சுமைகளுடன் இதனையும் இணைத்துஇ வரும் ஆடி மாதம் இடம்பெறவுள்ள முத்துமாரியம்பாளின் மகோற்சவ தினத்திற்கு முன்னதாக இப்பணி நிறைவுறும் வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் இயன்ற நிதியுதவியினை வழங்கியுதவுமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்ளுகின்றோம். நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
நன்றி
தொடர்பு கொள்ள வசதியாக:
தலைவர் செயலாளர் பொருளாளர்.
திரு.க.பரமானந்தம் தொ.பே இல:- 0779580745
பே.சுசியந்தன் தொ.பே இல:-0776484668
வை.கெங்காதரன் தொ.பே.இல:-0776951953 1ம்வட்டாரம்,மண்டைதீவு
இவ்வண்ணம்: பரிபாலன சபை


No comments:
Post a Comment